எது தமிழ் எது வடமொழி என்ற குழப்பம்.
இதோ ஒரு 50 சொற்கள்:
(கொடை : பாவாணர்)
அங்கவஸ்திரம் மேலாடை
அத்தியாவசியம் இன்றியமையாமை
அசங்கியம் அருவருப்பு
அந்தரங்கம் மறைமுகம்
அநேக பல
அப்பியாசம் பயிற்ச்சி
அபராதம் குற்றம்,தண்டம்
அபி§க்ஷகம் திருமுழுக்கு
அபிவிர்த்தி மிகுவளர்ச்சி
அபூர்வம் அரிது,அருமை
அமாவாஸ்யை காருவா
அர்ச்சனை தொழுகை,வழிபாடு
அர்த்தம் பொருள்
அவசரம் விரைவு,பரபரப்பு
அவசியம் தேவை
அவயவம் உறுப்பு
அற்புதம் புதுமை, இறும்பூது
அன்னம் உண்டி
அன்னவஸ்திரம் ஊணுடை
அன்னியம் அயல்
அனுபவி நுகர்
அனுஷ்டி கைக்கொள்
அஸ்திபாரம் அடிப்படை
ஆக்கினை கட்டளை
ஆகாரம் உணவு
ஆச்சர்யம் வியப்பு
ஆச்சசாரம் ஒழுக்கம்
ஆசீர்வாதம் வாழ்த்து
ஆதரி தாங்கு, அரவணை
ஆதி முதல்
அந்தம் முடிவு
ஆபத்து அல்லல்
ஆமோதி வழிமொழி
ஆரம்பம் துவக்கம், தொடக்கம்
ஆரோக்கியம் நலம், நோயின்மை
ஆலோசி சூழ்
ஆயுள் வாழ்நாள்
ஆனந்தம் களிப்பு
ஆஸ்தி செல்வம்
ஆ§க்ஷபி தடு
ஆட்§க்ஷபனை தடை
இந்திரன் வேந்தன்
இருதயம் நெஞ்சம், நெஞ்சாங்குலை
இஷ்டம் விருப்பம்
ஈஸ்வரன் இறைவன்
உத்தேசம் மதிப்பு
உத்தியோகம் அலுவல்
உபத்திரவம் தொலை, நோக்காடு
உபகாரம் உதவி, நன்றி
உபவாஸம் உண்ணாநோன்பு
உபாத்தியாயர் ஆசிரியர்
உற்சவம் திருவிழா
உற்சாகம் ஊக்கம்
உஷ்ணம் வெப்பம்
கங்கணம் வளையல், காப்பு
கங்கண விஸர்ஜனம் சிலம்பு கழி நோன்பு
ஜோதிடன் கணியன்
கபிலை குரால்
கருணை அருள்
கர்வம் செருக்கு
கவி செய்யுள்
கனகசபை பொன்னம்பலம்
கஷ்டம் வருத்தம்
கஷாயம் கருக்கு
காவியம் தொடர்நிலைச் செய்யுள்
காஷாயம் காவி
கிரகம் கோள்
கிரீடம் முடி
கிருகப்பிரவேசம் புதுவீடு புகல்
கிருபை அருள், இரக்கம்
கிருஷிகம் உழவு
கோஷ்டி குழாம்
சக்கரவர்த்தி மாவேந்தன்
சக்தி ஆற்றல்
சகலம் எல்லாம்
சகஜம் வழக்கம்
சகுனம் குறி, புள்
சகோதரன் உடன் பிறந்தான்
சங்கடம் இடர்ப்பாடு
சங்கரி அழி
சங்கீதம் இன்னிசை
சத்தம் ஓசை
சத்தியம் உண்மை
சத்துரு பகைவன்
சந்ததி எச்சம்
சந்தி தலைக்கூடு
சந்திப்பு கூடல்
சந்திரன் மதி, நிலா
சந்தேகம் ஐயம், ஐயுறவு
சந்தோஷம் மகிழ்ச்சி
சந்நிதி முன்னிலை
சந்நியாசி துறவி
சம்பந்தம் தொடர்பு
சம்பாஷணை உரையாட்டு
சம்பூரணம் முழுநிறைவு
சமாச்சாரம் செய்தி
சமுகம் மன்பதை
சமுசாரி குடும்பி
சமுச்சயம் அயிர்ப்பு
சமுத்திரம் வாரி
சர்வமானியம் முற்றூட்டு
சரணம் அடைக்கலம்
சரீரம் உடம்பு
சன்மார்க்கம் நல்வழி
சாதம் சோறு
சாதாரணம் பொதுவகை
சாஸ்திரம் கலை, நூல்
சாஸ்வதம் நிலைப்பு
சாக்ஷ¢ கண்டோன்
சிங்காசனம் அரியணை
சினேகிதம் நட்பு
சிரஞ்சீவி நீடுவாழி
சீக்கிரம் சுருக்கு
சுகம் உடல்நலம், இன்பம்
சுத்தம் துப்புரவு
சுதந்தரம் உரிமை
சுதி கேள்வி
சுபம் மங்கலம்
சுபாவம் இயல்பு
சுயமாய் தானாய்
சுயராஜ்யம் தன்னாட்சி
சுரணை உணர்ச்சி
ஸ்மரணை உணர்ச்சி
ஸ¤வர்க்கம் துறக்கம், உவணை
சுவாஸம் மூச்சு, உயிர்ப்பு
சுவாமி ஆண்டான், கடவுள்
சுவாமிகள் அடிகள்
சேவகன் இளையன்
சேவவை தொண்டு, ஊழியம்
சேனாபதி படைத்தலைவன்
சேனாவீரன் பொருநன்
சேஷ்டை குறும்பு
சொப்பனம் கனா
சோதி நோடு
செளகரியம் ஏந்து
ஞாபகம் நினைப்பு
ஞனம் அறிவு
தயவு இரக்கம்
தருமம் அறம்
தாஸி தேவரடியாள்
தானியம் கூலம், தவசம்
தினம் நாள்
துக்கம் துயரம்
துரோகம் இரண்டகம்
துஷ்டன் தீயவன்
தேகம் உடல்
தைலம் எண்ணை
தோஷம் சீர், குற்றம்
நதி ஆறு
நமஸ்காரம் வணக்கம்
நஷ்டம் இழப்பு
நக்ஷத்திரம் வெள்ளி, நாண்மீன்
நாசம் அழிவு
நாதம் ஒலி
நிஜம் மெய்
நிச்சயம் தேற்றம்
நித்திரை தூக்கம்
நியதி யாப்புறவு
நியமி அமர்த்து
நியாயம் முறை
நீதி நயன்
பக்தன் அடியான்
பக்தி தேவடிமை
பகிரங்கம் வெளிப்படை
பசு ஆவு, ஆன்
பஞ்சேந்திரியம் ஐம்புலன்
பத்திரம் தாள், இதழ்
பத்திரிக்கை தாளிகை
பத்தினி கற்புடையாள்
பதார்த்தம் பண்டம், கறி
பதிவிரதை குலமகள்
பந்து இனம்
பரம்பரை தலைமுறை
பரிகாசம் நகையாடல்
பரியந்தம் வரை
பக்ஷ¢ பறவை, புள்
பாத்திரம் ஏனம், தகுதி
பார்வதி மலைமகள்
பாவம் தீவினை
பானம் குடிப்பு, குடிநீர்
பாஷை மொழி
பிச்சை ஐயம்
பிச்சைக்காரன் இரப்போன்
பிசாசு பேய்
பிரகாசம் பேரொளி
பிரககாரம் படி
பிரசங்கம் சொற்பொழிவு
பிரசவம் பிள்ளைப்பேறு
பிரசுரம் வெளியீடு
பிரத்தியக்ஷம் கண்கூடு
பிரதக்ஷ¢ணம் வலஞ்செய்தல்
பிரயாசம் முயற்ச்சி
பிரயாணம் வழிப்போக்கு
பிரயாணி வழிப்போக்கன்
பிரயோகம் எடுத்தாட்சி, வழங்கல்
பிரயோஜனம் பயன்
பிரஜை குடிமகன்
பிரகாரம் சுற்றுமதில்
பிராணன் உயிர்
பிராணி உயிரி, உயிர்மெய்
பிராயச்சித்தம் கழுவாய்
பிரியம் விருப்பம்
பிரேதம் பிணம்
புண்ணியம் நல்வினை, அறப்பயன்
புத்தி மதி
புத்திமதி மதியுரை
புருஷன் ஆடவன்
புஷ்டி தடிப்பு, தசைப்பிடிப்பு
புஷ்பம் பூ
புஷ்பவதியாதல் முதுக்குறைதல், பூப்படைதல்
பூமி ஞாலம், நிலம்
பூர்வீகம் பழைமை
பூரணசந்திரன் முழுமதி
பூஜை வழிபாடு
போதி கற்பி, நுவல்
போஜனம் சாப்பாடு
போஷி ஊட்டு
பெளரணை நிறைமதி
மத்தி நடு
மத்தியானம் நண்பகல், உச்சிவேளை
மயானம் சுடுகாடு, சுடலை
மரியாதை மதிப்பு
மாமிசம் இறைச்சி
மார்க்கம் வழி
மிருகம் விலங்கு
முக்தி விடுதலை
முகஸ்துதி முகமன்
மூர்க்கன் முரடன்
மைத்துனன் அத்தான், அளியன், கொழுந்தன்
மோசம் கேடு
மோக்ஷம் வீடு, பேரின்பம்
யதார்த்தம் உண்மை
யமன் கூற்றுவன்,மறலி
யஜமான் தலைவன், ஆண்டான்
யாகம் வேள்வி
யோக்கியம் தகுதி
யோசி எண்ணு
ரகஸ்யம் மறைபொருள், மருமம்
ரஸம் சாறு
ரணம் புண்
ரத்தினம் மணி
ரத்தம் தேர்
ராசி ஓரை
ருசி சுவை
ரோமம் மயிர்
லஜ்ஜை வெட்கம்
லக்ஷ்மி திருமகள்
லாபம் ஊதியம்
லோபம் இவறன்மை
லோபி இவறி, கஞ்சன், பிசிரி
வசனம் உரைநடை
வமிசம் மரபு
வயசு அகவை
வர்க்கம் இனம்
வர்த்தகம் வணிகம்
வருஷம் ஆண்டு
வாத்தியம் இயம்
வாயு வளி
வார்த்தை சொல்
விகடம் பகடி
விசுவாசம் நம்பிக்கை
விசனம் வாட்டம்
விசாரி வினவு, உசாவு
விஷேசம் சிறப்பு
வித்தியாசம் வேறுபாடு
விநோதம் புதுமை
வியவகாரம் வழக்கு
வியவசாயம் பயிர்த்தொழில்
வியாதி நோய்
வியாபாரம் பண்டமாற்று
விரதம் நோன்பு
விரோதம் பகை
விஸ்தீரணம் பரப்பு
விஷம் நஞ்சு
வீரன் வயவன், விடலை
வேசி விலைமகள்
வேதம் மறை
வைத்தியம் மருத்துவம்
ஜயம் வெற்றி
ஜலதோஷம் நீர்க்கோர்வை, தடுமம்
ஜன்மம் பிறவி
ஜன்னி இசிவு
ஜனம் நரல், நருள்
ஜனசங்கியை குடிமதிப்பு
ஜனனமரணம் பிறப்பிறப்பு
ஜாக்கிரதை விழிப்பு
ஜாதகம் பிறப்பியம்
ஜாதி குலம்
ஜீரணம் செரிமானம்
ஜீரணோத்தாரணம் பழுதுபார்ப்பு
ஜீவன் உயிர்
ஜீவனம் பிழைப்பு
ஜீவியம் வாழ்க்கை
ஜோதி சுடர்
ஸ்தாபனம் நிறுவனம்
ஸ்திரீ பெண்டு
ஸ்தோத்திரி பராவு
ஸ்நானம் குளிப்பு
க்ஷணம் நொடி
க்ஷ£ணம் மங்கல்
§க்ஷமம் ஏமம், நல்வாழ்வு, காப்பு
சமீபம் அண்மை
தூரம் சேய்மை
குஷ்டம் குட்டம்
முஷ்டி முட்டி
வேஷ்டி வேட்டி

2 comments:
I am delighted to land on your blog which is but a landmark in the voyage of Tamil Blogs. I am particularly impressed with the list of words normally used by people in Tamil Nadu which owe their origin to Sanskrit. I am sure I shall be visiting your blog as often as I can.
A few blogs of mine, I hope, may be interest to you.
http://vazhvuneri.blogspot.com
http://menakasury.blogspot.com
http://movieraghas.blogspot.com
God Bless You.
Suryanarayanan S.
அப்பியாசம் பயிற்ச்சி - I was searching for this meaning on online tamil dictionary www.tamildict.com with no result. A Tamil astrologer wrote it on my profile. So this is a very good resource you have created.
Post a Comment