"இருமுனை ஒழுங்கின்மை", "ஈரந்த ஒழுங்கீனம்" எனவாச்சும் நேரடியா உடைச்சுச் சொல்லிடுவேன். ஆனா, mania & depression ரெண்டும் ஆல்டனேட்டிவ்வா ஓடிக்கிட்டிருக்கிறதால, இதுவும் நமக்குள்ள நோயாச்சோன்னு (disorder எங்குறத நோயின்னும் சொல்லமுடியுமா தெர்யல்ல) யோசிச்சுக்கிட்டிருக்கனா, கொஞ்சம் நோய்க்கேத்தமாதிரித்தான் தேடவேணுமாக்கும். "ஈருணர்வுநிலை ஒழுங்கின்மை"ன்னு சொல்லப்போனா, அதுக்குள்ளாற பேஷண்டு பேஷண்ஸ் இல்லாம ரெண்டு தடவ தன்னோட maxima-minima வ தொட்டுட்டு வந்துடுவான். "உணர்ச்சிப்பிறழ்வுநிலை ஒழுங்கீனம்", "உணர்ச்சிநிலை அலைவு", "உயர்தாழ் உணர்ச்சிமாற்ற ஒழுங்கீனம்", "ஈரந்த உணர்ச்சி ஒழுங்கின்மை" அப்டீன்னு டெபினிஸனையே குடுத்துடலாமுன்னாலும் சரியில்லே.
இராம.கி, வெங்கட், காசி இவுங்ககிட்ட கேளுங்கையா. உருப்படியா ஏதாச்சும் தருவாங்க. அதுல ஆளுக்கேத்த weight போட்டு ஒரு weighted average பாத்து எடுத்துங்க. நானும் அங்ஙன இங்ஙன பாத்துக்கொண்டிருக்கேன். நிச்சயமா இதுக்கு ஏற்கனவே தமிழ் வைத்தியத்துல மருந்து... அடச்சே! மருத்துவச்சொல் இருக்கவே செய்யுமுன்னு நினைக்குறேன்.
-------------------------------------------------------------------
1. வாரிய வழங்கல் = water supply by metro water board
2. புரை நீர் = borewell water
3. துரப்பு = traffic
4. தாங்கல் = tanker
5. நூற்று இருபது உருபாய்கள்
6. அலுவம் = அலுவலகம்
7. பொதின அட்டை = business card
8. செறிவு = concentration
9. வாரண நீர் = marine water, கடல் நீர்
10. ஆரளச் செறிவு = ஆர்ந்த உப்புச் செறிவு
11. எதிர் ஊடுகை = எதிர்த்துச் செல்லும் ஊடுகை = reverse osmosis; ஊடகம் என்ற சொல்லை
medium என்பதற்குச் சொல்லாமல் மிடையம் என்றே பயன்படுத்துவது நல்லது; இல்லையேல் ஊடுதல் = osmosis
என்ற நல்ல சொல்லைத் தவிர்க்க வேண்டியிருக்கும்.
12. திணைக்களம் = plant
13. பரிசல் = barge; முழுத் திணைக்களத்தையும் ஒரு பரிசலில் நிறுவி கடற்கரை அருகே எங்கு
வேண்டுமானாலும் நிறுத்த முடியுமாம்.
14. வேய்தல் = to build; ஒரு நாளைக்கு ஆயிரம் லிட்டர் நீரை விளைவிக்க, ரூ.70000 தான்
முதலீடு தேவைப்படுமாம். வெறும் நாலே மாதங்களில் திணைக்களம் அணியமாய் (ready) இருக்குமாம்;
கேட்பதற்கு வியப்பாய் இருக்கிறது.
15. முப்பத்திரண்டு கோடி லிட்டர் = சென்னையின் ஒரு நாள் நீர்த் தேவை.
16. மேலே உள்ள நீர்த்தேவையைக் கொண்டுதர ஆகும் எதிர் ஊடுகை திணைக்களத்தில் முதலீடு வெறும் 21 பில்லியன் உருபாய்கள்; அதாவது 2100 கோடி உரூபாய்கள்.
17. ஆறலைப்பு = வழிப்பறிக் கொள்ளை
18. நீரலைப்பு = நீரால் நடக்கும் கொள்ளை.
http://groups.yahoo.com/group/tamil-ulagam/message/28187
அன்புடன்,
இராம.கி.
_____________________________________________________________________
At 01:37 PM 3/14/2004, you wrote:
>அன்புடையீர்,
>கீழேயுள்ள ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களைத் தந்துதவுமாறுக் கேட்டுக்கொள்கிறேன்.
>algorithm
>formula
>authentication
>secure authentication
>encription
>
>அன்புடன்,
>முகுந்தராஜ்
அன்பிற்குரிய முகுந்த்,
algorithm = அல்கொரிதம்; இது அல் கொவாரிசுமி என்ற அரேபிய அறிவியலாளன் பெயரால் ஏற்பட்டது. இதை அப்படியே எழுத்துப் பெயர்த்து எழுதுவது தான் சிறப்பு; அப்படி எழுதுவதால் அவனுக்கு நாம் கொடுக்கும் மதிப்பு நிலைக்கிறது. இதை மாற்றுவது சரியல்ல.
form = உருவம்
format = உருவடம்
formula = உருவல்; (வாய்பாடு என்று முன்னால் சொல்லியது உண்டு. ஆனால் இங்கே இணைந்துள்ள மற்ற சொற்களைத் தொகுத்துச் சொல்ல அது வகைசெய்யாத காரணத்தால் இப்பொழுதெல்லாம் அதைத் தவிர்க்கிறேன்.)
to formulate = உருவலி, உருவலித்தல்
formulation = உருவலிப்பு
formulator =உருவலிப்பவர்
யாத்தல் = கட்டுதல்; உருவாக்குதல்
யாப்பு = கட்டுவதற்கான வழிமுறை; (procedure by which authoring takes place.) இது
ஏதோ கவிதைக்கு மட்டும் என்றும் எண்ணுவது தொல்காப்பியத்தின்படி தவறு. செய்யப் படுகின்ற, கட்டப் படுகின்ற எல்லாவற்றிற்கும் உள்ள வழிமுறை யாப்பு. இதில் சட்டதிட்டங்களும் அடங்கும் தான்.
யாக்கம் = one which is authored.
யாத்தோர் = author = உருவாக்கியவர்; கட்டுவித்தவர்
யாத்து(மை) = authorship;
authority = யாத்துரி(மை) (உருவாக்கியதால் வந்து சேர்ந்த உரிமை, இந்த உரிமையை
இன்னொருவருக்குக் கொடுக்கிற போது, யாத்துரிமை என்பது வழிப்படும் உரிமையும் ஆகிறது.
யாத்திகாரம்>ஆத்திகாரம்>ஆதிகாரம்>அதிகாரம் (வடமொழித் திரிவு; பின் தமிழ் அப்படியே எடுத்துக் கொண்டது). ஒரு நாட்டின் கட்டமைச் சட்டம் (constitution) மக்களின் நிகராளர்(representative)களால் யாக்கப் படுகிறது. யாக்கப்பட்டதால் சில உரிமைகள் குடிமக்களுக்கும், சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும், வெவ்வேறு அரசப் பணியாளர்களுக்கும் கொடுக்கப் படுக்கின்றன.
அரச யாத்துரி(மை) - state authority - இப்படி வருவதே. இதே போல குழுமங்கள், நிறுவனங்கள், குழுக்கள், இன்ன பிறவிலும் யாத்துரி(மை)கள் - authorities - வழங்கப் படுகின்றன. யாக்கம் செய்தவர் போக மற்றவருக்கும் இப்படி வழங்கப் படுவதால் யாத்துரி(மை) கிடைக்கிறது. யாத்தவர் போலவே இவர்களும் கருதப்படுகிறார்கள்; அதன் காரணமாகவே இவர்களுக்கு பொறுப்பும் ஏற்பட்டுவிடுகிறது. யாத்தல் என்ற வினையை மறந்து வெறுமே அதிகாரம் என்று திரிவு பட்ட வடமொழி வழக்கில் நாம் சொல்லத் தலைப்பட்டதால் தான் அதிகரிக்கின்ற என்ற ஆணவப் பொருள் உள்ளே வந்துவிட்டது.
யாக்கம் என்பது கட்டிக் கொண்டிருப்பது. கட்டி முடிந்தது யாத்து/ஆத்து எனப்படும். அதுவே சகரம் சேர்ந்து சாத்து என்றும் சொல்லப் படும். சாற்று = சொல்லு என்ற சொல்லில் இருந்து
சாற்றம்>சாத்தம்>சாத்ரம்>சாத்திரம்
வந்தது போல, எழுதியதும் கூடச் சாத்தம் என்றே சொல்லப் பட்டது. சாத்தில் கையிடுவது கைச்சாத்திடுவதாயிற்று. கைச்சாத்திடுதல் = to lay signature, to sign; சாத்துக்கை>கைச்சாத்து = signature. கைச்சாத்திடுதல் என்பது யாத்தவர் தன் அடையாளங் காட்டல்; (காட்டாக சம்பந்தர் தேவாரத்தில் பதிகத்தின் கடைசிப் பாட்டில் சம்பந்தன் என்ற பெயரை வைத்திருப்பார்; ஆழ்வார்கள் பலரும் தங்களுடைய பதிகங்களில் தன் பெயரை இடுவார்கள்; கருநாடக இசை மேதைகள், கோபால கிருட்டிண பாரதி இன்னும் பல இசை மேதைகள் தங்களுடைய பாடல்களில் அடையாளம் காட்டுவார்கள். ஓவியங்களில் இதுபோல யாத்தவரின் அடையாளம் - இவர்தான் யாத்தார் என்று குறிப்பதற்கு - ஏற்ப இருக்கும்.
கைச்சாத்து உள்ள பொருள் போலியன்று, உண்மையானது, கைச்சாத்தை இன்னொருவர் எளிதாக இடமுடியாது என்று அந்தக் காலத்தில் எண்ணினார்கள். எனவே கைச்சாத்துக் கொண்ட பொருள் authenitic. ஆங்கிலத்தில் சொன்னால் something that is authentic is something that has the authority of its original creator.
[கைத்தம், கைத்தலம் என்பது உள்ளங்கை, மற்றும் விரல் அடையாளங்களை, அடவுகளைக் குறித்தது.
கைத்தம்>ஹைஸ்தம்>ஹய்ஸ்தம்>ஹஸ்தம்>அஸ்தம்
என்று வடமொழியில் திரியும். மீண்டும் அதை தமிழ்மொழியில்
வாங்கி அத்தம் எனத் திரிப்போம். இந்தத் திரிவில் கூடவே metathesis - சேர்ந்து
கைச்சாத்து>அச்சாத்து>அத்தாச்சி>அத்தாட்சியாகி வந்து நிற்கும்.]
(கைச்)சாத்துமை = authenticity
(கைச்)சாத்திடுதல் = authenticate
(கைச்)சாத்தீடு = authentication
secure = சேமுறுதி; சேமம் என்பது safety; நல்ல நிலையில் இருப்பது. ஒரு பொருள் கெடாமல், கேடு தராமல், உள்ளது உள்ளபடியே இருந்தால் சேமமாய் இருக்கிறது என்று சொல்லுவோம். பொருளைச் சேர்ப்பதையும் சேமித்தல் என்று சொல்லுகிறோம்; ஏனெனில் கேடு வராமல் அது காக்கிறது. அந்த நல்ல நிலையை உறுதி செய்வது to secure என்று சொல்லப் படும். i.e to make it safe சேமத்தை உறுதி செய்தல் - சேமுறுத்தல். இதன் பெயர்ச்சொல் சேமுறுதி. சேமுறுத்தர் = security personnel.
தமிழைப் போன்ற ஒரு மொழியில் மூன்றசைக்கு மேற்பட்டால் அந்தச் சொல்லை ஆளுகின்ற எளிமை குறைந்துவிடும். கூடியமட்டும் ஈரசைyil இருப்பது நல்லது. இப்பொழுது secure authentication என்ற ஆங்கிலச் சொற்றொடர் சரவலான கூட்டுச்சொல். சேமுறுதியையும் கைச்சாத்தீட்டையும் சேர்த்தால்ரவ்வளவுதான்; நம் வாய் கொள்ளாது. எனவே சேம, கை என்ற முன்னொட்டுக்களை மறைபொருளாக்க வேண்டியது தான். வேறு வழியில்லை. எனவே கீழே உள்ளதைப் பரிந்துரைப்போம்.
சாத்துமை = authenticity
சாத்திடுதல் = authenticate (ஒரு நோடப் பொதுவரின் - notary public - முன்னால் சாத்திட்டு
இந்த ஆவணம் உண்மையானதே என்று விளம்புகிறோம்.)
சாத்தீடு = authentication
உறுதிச் சாத்தீடு = secure authentication (ஒரு நோடப் பொதுவரின் - notary public -
முன்னால் சாத்திட்டு, கூடவே நம்முடைய குழும முத்திரையும் - company seal - இட்டு இந்த ஆவணம் உறுதியாய் உண்மையானதே என்று அறுதியிட்டு விளம்புகிறோம்.)
சாத்தீட்டைச் சேமுறுத்தல் = to secure authentication
encryption = கரப்பீடு; உள்ளே ஒரு செய்தியைக் கரந்து வைத்துக் குறியிடுவது encryption.
அன்புடன்,
இராம.கி.

No comments:
Post a Comment