Iramaki
to order = ஒழுதருவித்தல் (=ஒழுதரச் செய்தல்); to order a set of things என்னும் போது "ஒரே வகையான பொருட்களின் கொத்தை ஒழுதருவிக்கிறோம்" என்று புரிந்து கொள்ளுகிறோம். இந்தக் காலத் தமிழில் ஒழுகுதல் என்ற வினை இருக்கிறது. ஒழுதருதல், ஒழுதருவித்தல் (=ஒழுதரச் செய்தல்) என்ற வினைகள் அருகிப் போய்விட்டன. இன்னொருவரை ஒழுக வைத்துத் தருவித்தல் என்பதே ஒழுதருவித்தல் (=ஒழுதரச் செய்தல்). அதாவது வரிசையாய் ஆக்கித் தர வைத்தல். இந்த வினைகளைப் புழக்கத்தில் கொண்டுவர வேண்டும்.
to order a doosa என்றால் வேறொன்றும் இல்லை; அடுத்த தோசை எனக்கு என்று வரிசையில் தரச் செய்தல். ஒவ்வொன்றாய் order செய்யும் போது வரிசையில் அந்தப் பொருட்கள் அடுத்தடுத்து நிற்கின்றன. வரிசை, ஒழுங்கு என்பவையே இந்தச் சொல்லாடலில் முகமையானவை. தோசையை ஒழுதருவிக்கிறோம் (=ஒழுதரச் செய்கிறோம்).
order = ஒழுங்கு (=ஒழுதரவு, வரிசை)
orderly = ஒழுங்காய் (=ஒழுதரவாய்)
ordain`= ஒழு(க வி)தித்தல்
ordeal = ஒழுக்கட்டு
ordinal = ஒழுங்கு (=ஒழுதை) எண்
ordinance = ஒழுதனம்
ordinary = ஒழுகுவது, ஒழுகக் கூடியது, ஒழுக இயல்வது, இயலொழுகு
ordinate = ஒழுகு
co-ordinate = உடனொழுகு
by order = ஒழுதரவின் படி
in order = ஒழுங்காய் (=ஒழுதரவாய்) இருத்தல்
in order that = ஒழுக வேண்டி
in order to = ஒழுகுதற்கு
keep order = ஒழுங்கைப் (=ஒழுதரவைப்) பேணுதல்
law and order = சட்ட ஒழுங்கு
money order = பண ஒழுதரவு;
send a money order = பண ஒழுதரவை அனுப்புதல்
new order = புது ஒழுங்கு (=ஒழுதரவு)
order of the day = இந்நாள் ஒழுங்கு (=ஒழுதரவு)
out of order = ஒழுங்கு (=ஒழுதரவு) மீறி
point of order = ஒழுங்கு (=ஒழுதரவு) பற்றியது
1. ஆர்டர் பெண்டிங் -பணிப்பு நிலுவை -ஆணை நிலுவை -ஒழுதரவு நிலுவை
2. ஆர்டர் ஸ்டேடஸ் -பணிப்பு நிலவரம் -ஆணை நிலவரம் -ஒழுதரவு நிலவரம்
3. ஆர்டர் புரோகிரஸ் -பணிப்பு முன்னேற்றம் -ஆணை முன்னேற்றம் -ஒழுதரவு முன்னேற்றம்
ஓட்டலில் கொடுக்கும் ஆர்டருக்கு ஒழுங்கு பொருந்தாது என்று நினைக்கிறேன். ஒழுதரவு புதுச்சொல். புழக்கத்துக் கொண்டுவரலாம்.
பணிப்பு என்பதை order, command என்னும் பொருளில் புறப்பொருள் வெண்பாமாலையில்
பயன்பட்டிருப்பதாக சென்னைப் பல்கலையகராதி குறிப்பிடுகிறது.
பணித்தல்(பணிப்பு), ஆணை, ஒழுதரவு, கட்டளை, ஆக்ஞை(ஆக்கினை), ஏவல், கட்டளை, ...
ஓர்டர்' என்றால் உத்தரவு அல்லது ஆணை (ஆக்ஞை..?) என்றுதானே பொருள்..??
மற்றபடி ஆக்கினை என்றால்.. அது தண்டனை என்றே பொருள் படும்.. இல்லீங்களா..?!
(தன்வினையால் தானே ஆக்கிக் கொள்வதைத்தானே ஆக்கிணை என்றார்கள்..?!?
Monday, April 18, 2005
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment